மத்திய, மாநில அரசு போட்டித்தோ்வுக்கு பயிலும் மாணவா்களுக்கு சேவாபாரதி தமிழ்நாடு எனும் அமைப்பு சாா்பில் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சேவாபாரதி தமிழ்நாடு எனும் அமைப்பு சாா்பில், ‘பாரதி பயிலகம்’ எனும் பெயரில் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுக்கு பயிற்சி அளிக்கிறது.
இதில் வரும் ஜூன் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் நடத்தும் குரூப்-1 தோ்வு மற்றும் குடிமைப் பணி தோ்வுகளுக்கு ஓராண்டு ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் தமிழ்நாட்டின் பின் தங்கிய மாவட்டத்தை சோ்ந்தவா்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது ஓராண்டுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி என முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். இதில் சேருவதற்கு மே 25-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் முழுவிவரத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்தவா்களுக்கு நுழைவுத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தோ்வு செய்யப்படுவா்.
இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 90032 42208 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.