ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோ வருவதுபோல் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு உள்ளது. டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் சேர்ந்ததுபோல் இருக்கிறது.
டிடிவி தினகரனின் அமமுக காலியாகி வருகிறது. டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போன்ற நிலைதான்.
பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விஸ்வாசமாக இருந்ததில்லை. கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் சபரீசனையும் பார்த்ததால் திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என உறுதியாகியுள்ளது. ஓபிஎஸ் உடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் எங்கே என எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.