நீருக்கடியில் அமையும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: ஆச்சரிய தகவல்கள்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தின் கீழ் நீருக்கடியில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நீருக்கடியில் அமையும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை: ஆச்சரிய தகவல்கள்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தின் கீழ் நீருக்கடியில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னையில் மூன்று வழித்தடங்களில் உருவாகிறது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம். இதில், முதல் வழித்தடத்தில் கூவம் ஆற்றுக்குக் கீழே இரண்டு சுரங்கப் பாதைகள் அமையவிருக்கின்றன. சென்னை மெட்ரோ -  ஓமந்தூரர் தோட்டம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் அருகே சென்னை சென்டிரல் மெட்ரோ இடையே.

ஏற்கனவே சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதை தோண்டும் காவேரி என அழைக்கப்படும் இயந்திரம் இதுவரை 60 மீட்டர் பாதையை தோண்டிஎடுத்துள்ளது.

தற்போது, அடையாறு ஆற்றுக்குக் கீழே சுரங்கம் தோன்றும் பணி தொடங்கியிருக்கிறது. அடையாறு ஆற்றுக்கிக் கீழே சுமார் 1.2 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கப்பாதை அமையவிருக்கிறது. 
இரண்டாம் வழித்தடத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், நீர்வழித்தடங்களில் இரண்டு சுரங்கப் பாதைகளை அமைக்கவிருக்கிறது.  இதுதான், இந்த நகரின் முதல் நீருக்கடியில் அமையும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளாகும்.

இந்தப் பணிகளுக்காக, சேத்துப்பட்டு மற்றும் அடையாறு பகுதிகளில் இருந்து அதிகாரிகள் மண் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இங்கு இரட்டைச் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள இந்த மண் பரிசோதனைதான் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இரண்டு பகுதிகளில் மெட்ரோ ரயில் வழித்தடங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்குகிறது. அதாவது, அடையாறு ஆறு மற்றும் சேத்துப்பட்டு ஏரி, மாதவரம் பால் பண்ணை மற்றும் சிறுசேரி தொழிற்பேட்டை என கிட்டத்தட்ட 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை உருவாகிறது.

ஒட்டுமொத்தமாக 118.9 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய 2026ஆம் ஆண்டுவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் அமையும் சுரங்கமானது, கேஎம்சி அருகே 30 மீட்டர் ஆழத்திலும், சேத்துப்பட்டு அரகே 22 மீட்டர் ஆழத்திலும் அமையும் என்று கூறப்படுகிறது.

அடையாறு ஆறு அருகே அமையும் சுரங்கப் பாதையானது, அடையாறு இணைப்பு ரயில் நிலையம் மற்றும் அடையாறு பேருந்து நிலைய நிறுத்தத்தை இணைக்கும் வகையில் அமையவிருக்கிறது.

சேத்துப்பட்டு ஏரி சுரங்கப்பாதையானது பர்னமி சாலையில் உள்ள கேஎம்சி ரயில் நிலையம் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் அமையும்.

இந்த இரண்டு சுரங்க ரயில் பாதைகளை அமைப்பதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால், மெட்ரோ ரயில் நிர்வாகம் அதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com