சீர்காழியில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி

சீர்காழியில் புறவழிச் சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலி
Published on
Updated on
2 min read

சீர்காழியில் புறவழிச் சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல்  இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுபோது சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பேருந்து அதிவேமாக மோதினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் மோதி  விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய மூவரும் பேருந்தின் கீழே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பேருந்தில் பயணம் செய்த 43 பேரில்  பேருந்து நடத்துனர் விஜயசாரதி உள்ளிட்ட உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். 

சம்பவம் அறிந்து திரண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 108 வாகனத்தின் மூலம் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அரசு பேருந்து நடத்துனர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இக்கோர விபத்தில்  எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட நான்கு பேர் பலியாகினர்.

மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபத்து குறித்து கேட்டறிந்தார். 

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக பேருந்துகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

புறவழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்

சீர்காழி புறவழிச் சாலையில் போதிய மின்விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் விபத்துகள் தொடர்ந்து  நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டாக  நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிக்கு போதிய எச்சரிக்கை பலகை, தடுப்பு கட்டைகள் போன்ற எந்த வித பாதுகாப்பு அம்சங்களும்  வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தாமல் நடைபெறுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்  என்பது  குறித்து தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.

விபத்துக்களை  தடுக்க  உரிய பாதுகாப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆனால் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது கோர விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com