பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் விழா தற்காலிக நிறுத்தம்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் விழா தற்காலிக நிறுத்தம்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோயில் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட ஜோதியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.  144 தடை உத்தரவு காரணமாக ஜோதியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து,  திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா மே 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்

திருவிழா அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வியாழக்கிழமை (மே 11) மாலை 6 மணி முதல் மே 14 ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும், விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்களை ஊா்வலமாக கொண்டு வருவதற்கும், வாடகை வாகனங்களில் விழாவிற்கு வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com