உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை: மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!

உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. திமுக நிர்வாகிகள் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவார்கள்
உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை: மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை!

சென்னை: உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. திமுக நிர்வாகிகள் கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவார்கள் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தவாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி உள்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும். 

கட்சி வேலைகளை பொறுப்புடன் செய்யாத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள்.

உங்கள் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். சில மாவட்டச் செயலாளர்களை விடுவிக்கும் நிலை ஏற்படலாம் .

உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்.

கட்சி நிர்வாகிகளின் நலன் சார்ந்தும் பேரவை உறுப்பினர்கள்,அமைச்சர்கள் செயலாற்ற வேண்டும். 

சுணக்கமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில், குடியரசுத் தலைவர் பங்கேற்க  இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக  செய்ய வேண்டும். 

திமுகவில் தேர்தல் அறிக்கைள் வாக்குறுதிகளை அண்டை மாநிலத்திலும் பின்பற்றுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

மேலும், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் கட்சி பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com