திருச்சி: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் நான் ஏற்கெனவே பேசியிருக்கிறேன்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தும் செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நடைபெறுகிறது.
தமிழக டிஜிபி கஞ்சா விற்பனை தடுக்க 2.0, 4.0 என்று 'ஓ' போடுவதை மட்டும் தான்செய்கிறார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட தமிழக டிஜிபி அனுமதிப்பதில்லை. முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
முதல்வர் பதவியேற்ற நாளிலிருந்து தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை என்று அமோகமாக நடைபெற்று வருகிறது.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பத்திரிகையில் வந்த செய்திகளை அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கு முழு பொறுப்பேற்று தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


