சென்னையில் 2 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்குமாம்: மக்களே உஷார்!

சென்னையில் 106 டிகிரி பாரன்ஹிட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்குமாம்: மக்களே உஷார்!

சென்னையில் 106 டிகிரி பாரன்ஹிட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

நேற்று(மே 4) வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர மோக்கா புயல் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை கடந்தது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 

மே 15 முதல் மே 19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை

மே 15 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (heat stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு.

மே 15, 17 வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னால் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு  40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் விசக்கூடும். 

மீனவர்கள் இப்பகுதிளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com