சென்னையில் நேற்று(மே 15) அதிகபட்ச மின் நுகர்வு: செந்தில் பாலாஜி ட்வீட்!
சென்னையில் நேற்று(திங்கள்கிழமை) மின் நுகர்வு அதிகரித்தபோதிலும் எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


சென்னையில் நேற்று(திங்கள்கிழமை) மின் நுகர்வு அதிகரித்தபோதிலும் எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மக்களின் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'சென்னையின் நேற்றைய 15/05/2023 மின் தேவை 3991 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 20/04/2023ல் 3778 மெகாவாட் ஆகும். நேற்று சென்னையில் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன் 21/04/2023 அன்று 84.23 மில்லியன் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்து, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...