குளித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்!

தஞ்சையில் குளித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டும் இளைஞர்!

தஞ்சையில் குளித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்னி நட்சத்திரம் வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. அடுத்தடுத்த நாள்களிலும் மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த 4ம் தேதி தொடங்கி, வருகிற 29ம் தேதி வரை கத்திரி வெயில் காலம் உள்ளது. இதில் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை வெயில் தாக்கம் அதிகம் தெரியவில்லை. ஆனால் கடந்த 4 நாள்களாக கத்திரி வெயில் மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது. 

இனி வரும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதிலும் இயல்பான அளவை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில்தான் இளைஞர் ஒருவர் செய்த செயல் விடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே முன்புறம் வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு, குவளையில் தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டே வாகனத்தை இயக்கி செல்கிறார். 

இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் இந்த இளைஞர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகன குளியல் நடத்தியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com