பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் 17ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்தத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜூன் 19 - 26ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. துணைத் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை துணைத் தேர்வுகள் நடைபெறும்.
இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், www.dge.in.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...