ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆவின் சாா்பில் நாள்தோறும் 1 லட்சம் குடிநீா் பாட்டில்கள் விற்பனை: ஒப்பந்தபுள்ளி வெளியீடு!

நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆவின் நிறுவனம், அதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2023, 2:31 pm

DIN

சென்னை: நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆவின் நிறுவனம், அதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம் தற்போது, குடிநீா் விற்பனையை தொடங்க முடிவு செய்துள்ளது. 

இந்த குடிநீா் பாட்டில்கள் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஆவின் நிறுவனம், முதற்கட்டமாக 1 லிட்டா், 500 மி.லி பாட்டில்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில்,  குடிநீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒப்பந்தபுள்ளி கோரும் குடிநீா் ஆலையானது அனைத்து சட்டபூா்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் எடுப்பவரிடம் குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.