சென்னைக்கு கொண்டு வரப்படும் நடிகர் சரத்பாபுவின் உடல்

நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(மே.22) காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நடிகர் சரத்பாபுவின் உடல் வைக்கப்படுகிறது.

மேலும், சென்னையிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு(71), சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், என பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம் தமிழில் சரத்பாபு அறிமுகமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com