மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை புதிதாக நியமித்தும் மாற்றியும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் 16 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை புதிதாக நியமித்தும் மாற்றியும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 

தேனி - ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு
தருமபுரி - வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 
தென்காசி - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
ராமநாதபுரம் - நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
காஞ்சிபுரம் - சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 
திருநெல்வேலி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
மயிலாடுதுறை - சுற்றுச்சூழல் நலத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன். 
கோயம்புத்தூர் - மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 
கிருஷ்ணகிரி - உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி
திருவள்ளூர் - கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி 
பெரம்பலூர் - போக்குவத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
தஞ்சாவூர் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 
நாகப்பட்டினம் - சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com