எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் அன்பில் மகேஸ்(கோப்புப்படம்)
Updated On :25 மே 2023, 3:33 pm

DIN

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா். 

இந்த நிலையில், இன்று  அவர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.