சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் சென்னை - நெல்லை இடையே சிறப்பு  ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை - நெல்லை இடையே சிறப்பு  ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை - நெல்லை இடையே நவ.8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு  ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும்.

நவ.9, 16, 23ல் ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அதிகாலை 3.45க்கு சென்னை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com