
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அதிகயளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகயளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு பாதிப்பு பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.