தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2023, 8:29 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 439 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்புப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் கொள்ளளவு 52 அடியாகும்.  தற்போது, கிருஷ்ணகிரி அணையின் மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து வினாடிக்கு 439 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

நீர் வெளியேற்றம் அதிகரிப்பு குறித்து, தென்பெண்ணை ஆறு பாயும் தர்மபுரி, திருவண்ணாமலை,  விழுப்புரம்,  கடலூர் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு பாயும் ஆற்றங்கரை ஓரத்திலும், தாழ்வான பகுதியில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வருவாய்த் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.