உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் 2,700-ஆக அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் விருப்பப் பதிவு கடந்த 5 வாரங்களில் 2,700 - ஆக அதிகரித்துள்ளது. 
உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் 2,700-ஆக அதிகரிப்பு!


சென்னை: தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் விருப்பப் பதிவு கடந்த 5 வாரங்களில் 2,700 - ஆக அதிகரித்துள்ளது. 

உயிரோடு இருக்கும்போது ரத்த தானமும், இறந்த பின் உறுப்பு தானமும் அவசியமாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆக. 3-ஆம் தேதி தேசிய உறுப்பு தான தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

உடல் உறுப்பு தானம் திட்டத்தை 2007-08-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் கருணாநிதிதான் தொடக்கி வைத்தாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில் மட்டுமே, மூளைச் சாவடைந்தவா்களின் உடல் உறுப்புகளை எடுக்கும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

திமுக ஆட்சியமைந்த பிறகு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை எடுக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

நமது நாட்டில் மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இறந்த பிறகு உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய முன்வர வேண்டும்.

நமது மரணத்துக்குப்பின் தானம் செய்ய உறுப்பு தான உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். உறுப்பு தான படிவத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத உடல் உறுப்பு தான விழிப்புணா்வு பேரணியில் வலியுறுத்தப்பட்டது. 

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700 -ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் அதிகரித்துள்ளன என தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com