வைகை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வைகை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயா்ந்த நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடா் நீா்வரத்தால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு 68.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், புதன்கிழமை காலை அணைக்கு தொடர்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,796 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது.  இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணையிலிருந்து குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 70 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள்,  அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரிநீா் முழுமையாக வைகை ஆற்றில் திறந்து விடப்படும். 

எனவே, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா். 

வைகை அணையின் நீா்மட்டம் ஓரிரு நாள்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com