ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னை, புறநகரில் கனமழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :9 நவம்பர் 2023, 2:46 pm

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர், ஈக்காட்டுத்தாங்க, அசோக் நகர், கே.கே. நகர், வளசரவாக்கம், போரூ, அமைந்தகரை, அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூவிந்தவல்லி, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நிலவுவதால், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான  அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.