ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை அருகே அக். 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக சென்னை நந்தனத்தைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை (42) கிண்டி போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, கருக்கா வினோத்தை போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனா். அதில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்; 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அவா் வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.