10,12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று(நவ. 14) குழந்தைகள் தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வென்ற 180 மாணவ - மாணவியருக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 'பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதுகுறித்து கண்காணித்து வருகிறோம். மழை அதிகமுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறோம்.
இதனை ஈடுசெய்யும் பொருட்டு மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். ஏனெனில் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது.
10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2-3 அட்டவணைகள் தயார் நிலையில் உள்ளன. நீட், ஜேஇஇ, கிளாட் உள்ளிட்ட மற்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக பரிசீலித்து பொதுத்தேர்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மகரம்

”மனநிறைவு! மகிழ்ச்சி!!” கூட்டணி பங்கீடு குறித்து செல்வப்பெருந்தகை!

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: தனுசு
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

