ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை டிச. 2ம் தேதி ஒத்தி வைப்பு

புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 நவம்பர் 2023, 2:00 pm IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற வழக்கு விசாரணையில் விஜயபாஸ்கர் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆஜராயினர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் டிச. 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் 2021 இல் வழக்குப் பதிவு செய்து கடந்த மே 22-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.