
அம்பாசமுத்திரம்: 16 நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்த நிலையில் வியாழக்கிழமை இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மீண்டும் வெள்ளிக்கிழமை காலை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தென் மாவட்டங்களில் தீவிரம் அடைந்ததையடுத்து அக்டோபர் 31 முதல் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடி!
இதையடுத்து நவ.16 வியாழக்கிழமை நீர் வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அம்பாசமுத்திரம், பாபநாசம், வீரவநல்லூர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகும் நிலையில் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.