சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: திருச்செந்தூரில் 33 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 நவம்பர் 2023, 5:36 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது.

இக்காற்று சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.