சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

27.3.1976: வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடத்தல் பொருள்கள் - இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கடத்தல் பொருள்கள் கைப்பற்றல் பற்றி...

half century ago

27.3.1976 - DNS

Published On :27 மார்ச் 2026, 3:30 am IST

புதுடில்லி, மார்ச் 26 - கடிகாரங்கள், கணக்கு யந்திரக் கருவிகள் பிலிம்கள் போன்ற பல கடத்தல் பொருள்கள் கடந்த பிப்ரவரி 29-ம் தேதியன்று சில வெளிநாட்டுத் தூதராலய அதிகாரிகளிடமிருந்து பாலம் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன.

வெளி விவகார மந்திரி ஒய். பி சவாண் இன்று ராஜ்ய சபையில் இத்தகவலைக் கூறினார்.

ஆனால் அவர்கள் எந்த நாட்டுத் தூதராலய அதிகாரிகள், பெயர் என்ன என்ற விவரங்களையெல்லாம் அவர் கூறவில்லை.

சம்பந்தப்பட்ட தூதுவராலயத்திடம் கடும் ஆட்செபம் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து வாபஸ் பெறப்பட்டு விட்டனர். சமீபத்தில் சில மாதங்களில் இதைப் போன்ற சம்பவம் வேறு எதுவும் நடந்ததாகக் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

நெய்வேலி அனல் மின் நிலைய விரிவுபற்றி ஆய்வு நடக்கிறது

சென்னை, மார்ச். 26 - நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் ஒன்றை வெட்டுவதன் மூலமாக நெய்வேலி அனல் மின்சார நிலையத்தை விரிவு படுத்துவது பொருளாதார ரீதியாக அவசியமா என்பதைக் கண்டறிய ஆய்வு நடக்கிறது என்று தமிழ்நாடு கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்ரமணியம் இன்று தெரிவித்தார்.

"நெய்வேலி அனல் மின்சார உற்பத்திக்கு ஆகின்ற செலவு, தெற்கு பிராந்தியத்தில் உள்ள இதர மாநிலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், அதனைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் ஆகின்ற செலவு ஆகியவை ஒப்பிடப்படும்.

பிற மாநிலங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஆகக் கூடிய செலவைவிட நெய்வேலி அனல் நிலைய மின்சாரத்தின் உற்பத்திச் செலவு குறைவானது என்று தெரிய வருமானால் நெய்வேலி அனல் மின்சார நிலையம் இரண்டாவது சுரங்கம் ஒன்றை வெட்டுவதன் மூலம் விரிவு படுத்தப்படும். எனவே நெய்வேலி அனல் மின்சார நிலையத்தை மேற்கொண்டு விரிவுப் படுத்துவது பொருளாதார உண்மைகளைப் பொறுத்ததாக இருக்கும்" என்று சுப்பிரமணியம் இன்று தென்னிந்திய தொழில் வர்த்தக சபைக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

Summary

Foreign consular officials seized contraband - deported from India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.