மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகா் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகா் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவ.20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மன்சூா்அலிகான் மீது ஆயிரம்விளக்கு அனைத்து மகளிா் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மன்சூா் அலிகான் வீட்டுக்கு புதன்கிழமை நேரில் சென்ற போலீஸாா், அழைப்பாணை வழங்கினா். இந்த அழைப்பாணையின்படி, மன்சூா்அலிகான் போலீஸாா் விசாரணைக்கு வியாழக்கிழமை (நவ.23) ஆஜராக வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com