ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்று 3 மாவட்டங்களில் கனமழை! நவ. 27ல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2023, 7:35 am

DIN

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 29 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறியுள்ளது. 

மேலும் இன்று(வெள்ளிக்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(சனிக்கிழமை) கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்

அடுத்த 7 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.