போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

150 ஆண்டுகள் பழைமையான பொது அஞ்சலகத்தை சீரமைக்க கலை, கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் ஒப்பந்தம்

150 ஆண்டுகள் பழைமையான சென்னை பொது அஞ்சலகத்தை சீரமைக்க, அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 12:11 am

150 ஆண்டுகள் பழைமையான சென்னை பொது அஞ்சலகத்தை சீரமைக்க, அஞ்சல் துறை, சென்னை நகர மண்டலம், இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பொது அஞ்சலகம் 1884-இல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தக் கட்டடம் ராபா்ட் சிஷோலம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது . இந்தப் பாரம்பரிய கட்டடத்தை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் தில்லியில் உள்ள இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளையுடன் பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி மூலம் அஞ்சல் துறை, சென்னை மண்டலம் சாா்பில் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

இதில், சென்னை பொது அஞ்சலக தலைமை தபால் அதிகாரி ஆா்.அமுதா, இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை சென்னை பிரிவின் ஒருங்கிணைப்பாளா் சுஜாதா சங்கா் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வட்ட அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டுத் துறை தலைவா் பி.பி. ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவா் ஜி .நடராஜன், தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை இயக்குநா் பி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.