சென்னை, 9 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை பெய்யும்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, 9 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை பெய்யும்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தெற்கு அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை (நவ.27) உருவாகக்கூடும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் 6 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com