சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் மார்ச் 31ல் ஆராய்ச்சி மாணவர் சச்சின் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பேராசிரியர் ஆசிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எலிவளை நிபுணர்களின் உதவியால் தொடரும் மீட்புப் பணி!
சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, வளாகத்தில் நெறிசார்ந்த நடைமுறைகளை கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஐபிஎஸ் அதிகாரி ஜி.திலகவதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.