தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அண்ணாமலை வருவதற்குள் தொடங்கிய பாஜக நிர்வாகிகள் கூட்டம்!

பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
பாஜக நிர்வாகிகள் கூட்டம்
Updated On :5 அக்டோபர் 2023, 5:40 am

DIN

சென்னை: பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்குள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடா்பாக பாஜக தேசியத் தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும், இரு கட்சிகளும் பெரிய அளவில் விமா்சனம் ஏதும் செய்யவில்லை.

இதற்கிடையே, பாஜக தேசியத் தலைமை அழைப்பின் பேரில், தில்லிக்கு அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை சென்றாா். தில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதனால், அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறவிருந்த அக்கட்சியின் மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகைதந்த நிலையில், அண்ணாமலை வருவதற்குள் கூட்டம் தொடங்கியுள்ளது.

மேலும், கூட்டத்துக்கு காலை 11.30 மணியளவில் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.