பட்டாசு கடையில் தீ விபத்து: 10 பேர் பலி
அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள்.


அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென அருகிலுள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
கடையில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
லாரியின் வந்த பட்டாசுகளை இறக்கும்போது மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்தில் கடை ஊழியர்கள் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...