‘அணையை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம்’: துரைமுருகன் கிண்டல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்ததால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
‘அணையை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம்’: துரைமுருகன் கிண்டல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்ததால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடகம் மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

சட்டப்பேரவை தொடங்கியவுடன் நடைபெற்று வரும் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, “முந்தைய ஆட்சியில் ரூ. 1,296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் அந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தற்போது சாக்கடை நீர் கலந்து வருகின்றது. 24 மணிநேரமும் சுத்த குடிநீர் கிடைக்கும் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “இந்த திட்டத்தை தொடங்கிவிட்டு முந்தைய ஆட்சியில் கிணறு தோண்டுவதற்கான அனுமதியை வனத்துறையிடம் வாங்காமல் இருந்தனர். தற்போது நாங்கள்தான் அனுமதி பெற்று பணிகளை தொடங்கியுள்ளோம். மேல்நிலைத் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் மதுரைக்கு விரைவில் வழங்குவோம்.” என்றார்.

இதற்கிடையே இருக்கையில் இருந்து எழுந்த அமைச்சர் துரைமுருகன், “தண்ணீர் நிச்சயமாக கொடுப்போம். அந்த தண்ணீர் காலியாக இருக்க அணையில் தெர்மாகோல் போட்டு மூடிவைத்துள்ளோம்.” என்று கிண்டலாக பதிலளித்தார்.

அமைச்சரின் பதில், பேரவைத் தலைவர் அப்பாவு உள்பட பேரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com