அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்!

சென்னையில் தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :10 அக்டோபர் 2023, 10:14 am

DIN

சென்னையில் தமிழக பாஜகவின் மாநில மையக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் இருந்துவந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. 

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறி வருகிறது. இது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த அக். 5 ஆம் தேதி பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.