நாகப்பட்டினம்: காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கோரியும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் இன்று நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள், மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் கடைகள் அடைத்துள்ளனர்.

நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.

குறிப்பாக சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் இன்று மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


