தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
கோப்புப்படம்
Updated On :13 அக்டோபர் 2023, 4:16 am

DIN

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

கேரள லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம், கொச்சி அமலாக்கத் துறையினா் மாா்ட்டின் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதனடிப்படையில், மாா்ட்டின் வீட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையை அடுத்து, அவரது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, மாா்ட்டினின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி, அவரது உறவினா்களின் வீடுகளிலும் அப்போது சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், தற்போது மீண்டும் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை (அக்.12) முதல் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

கோவை, துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மாா்ட்டின் வீடு, அதன் அருகில் மாா்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காா்ப்பரேட் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கேரளத்தில் இருந்து 2 காா்களில் வந்த 11 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினா் சோதனை செய்து அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றினா்.

வருமான வரித் துறையினரின் சோதனையையொட்டி, மாா்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன் துப்பாக்கிய ஏந்திய சிஆா்பிஃஎப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.