பிரபல இணைய தேடுபொறியான ‘கூகுள் க்ரோமில்’ பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக பயனா்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு என்பது நாட்டில் கணினி பாதுகாப்பு குறைப்பாடுகள் கண்டறியும் போது அதற்கான பதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும்.
இந்நிலையில், கூகுள் க்ரோம் தேடுபொறியில் கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட எச்சரிக்கையின் விவரம்: தற்போதைய பாதுகாப்பு குறைபாடுகளின் ஆபத்துகள் மூலம் கூகுள் க்ரோம் நிறுவப்பட்டுள்ள அமைப்பின் குறியீட்டுகளை( கோட்) இயக்கி சேவையைக் கட்டுப்படுத்த முடியும்.
‘விண்டோஸ்’ இயங்குதளத்துக்கான (ஓ.எஸ்) கூகுள் க்ரோம், 118.0.5993.70 மற்றும் 118.0.5993.71-க்கு முந்தைய பதிப்புகள் மற்றும் ‘ஐ-மேக்’ மற்றும் ‘லினக்ஸ்’ இயங்குதளத்துக்கான கூகுள் க்ரோம், 118.0.5993.70-க்கு முந்தைய பதிப்புகளில் மென்பொருள் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பதிப்புகளைத் தவிா்த்து பாதுகாப்பான புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்த பயனா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

