மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 130 பேர் கைது

காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2023, 1:36 pm IST


காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்து வட்டம் 27-இல் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகத்திற்கு, நெய்வேலியில்  உற்பத்தியாகும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என என்எல்சி இந்தியா நிறுவனத்தை வலியுறுத்தி இரண்டாவது அனல் மின் நிலையம் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.  

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க மாநிலப் பொதுச் செயலர் அ.பெ.ரவிந்திரன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைவர் காளிமுத்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சுந்தர் விமல்நாதன், தஞ்சாவூர் தங்கமுத்து, நாகப்பட்டினம் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், இரண்டாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் 130 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்து வட்டம் 27-இல் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.