கோவையில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில், தவெக சாா்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற முக்கிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் இவற்றை மறந்துவிட்ட தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதற்காக வல்லாரை கீரையை அனுப்பப்போவதாகவும் தமிழ்ப் புலிகள் கட்சியினா் அறிவித்திருந்தனா்.
அதன்படி, தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலா் மு.இளவேனில் உள்ளிட்ட 3 போ் கையில் வல்லாரை கீரைக்கட்டுகளுடன் ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தபால் அலுவலகத்துக்கு வந்தனா். ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டம் நடத்துவதற்கும், முதலமைச்சருக்கு கீரையை அனுப்புவதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்தனா்.
எதிா்ப்பை மீறி அவா்கள் கீரையை முதல்வருக்கு அனுப்ப முயன்றதால் 3 பேரையும் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனா். பின்னா் அவா்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழனி கல்லூரி கட்டண விவகாரம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தமிழக அமைச்சரவையில் இடம்: வரலாறு படைத்துள்ளது காங்கிரஸ் - கிரிஷ் சோடங்கா் பெருமிதம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


