மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!

தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி  நிலையத்தில் திங்கள்கிழமை மின்சார உற்பத்தி 117 மெகாவாட்டாக அதிகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.

News image
Updated On :16 அக்டோபர் 2023, 5:11 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி  நிலையத்தில் திங்கள்கிழமை மின்சார உற்பத்தி 117 மெகாவாட்டாக அதிகரித்து உற்பத்தி செய்யப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக்கிழமை 1000 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 1,300 கன அடியாக வெளியேற்றப்பட்டது. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட்டாக உற்பத்தியானது, திங்கள்கிழமை 117 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்
திங்கள்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.80 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 3,182 .40 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 1,401.39 கன அடியும், தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,300 கன அடியும் வெளியேற்றப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 17.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.4 மி.மீ., மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.