விழுப்புரம் அருகே அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட்ட இடத்தில் அமலாக்கத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி செயல்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏனாதிமங்கலத்திலுள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்த நிலையில் , அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மணல் அள்ளியதாகப் புகார்கள் எழுந்தன. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, விசாரணையில் மணல் குவாரி இயங்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மணல் குவாரி இயங்கிய இடத்துக்கு 7 அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
ட்ரோன் கேமரா கொண்டு மணல் குவாரியில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது போன்ற விவரங்களைப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...