ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவையில் கனமழை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

News image
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
Updated On :17 அக்டோபர் 2023, 3:26 am

DIN

கோவை: கோவையில் கனமழை பெய்ததால் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

கோவை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலை மேடும்பள்ளமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஒரு வழி போக்குவரத்து மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருச்சி சாலை நோக்கி செல்லும் பாதை மட்டுமே போக்குவரத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக சாலை ஓரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கட்டடத்திற்கு செல்ல முயன்ற போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதில் ஒருவர் தப்பித்து விட்டார். மற்றொருவர் சாலையில் உள்ள பள்ளத்தில் கால் சிக்கியதால் அங்கேயே கீழே விழுந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.