கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்ய கடைசி நாள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:10 am

DIN


சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது.

தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் செப். 15ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்து, அவற்றில் தகுதியான விண்ணப்பதாரா்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டனா். மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத் தெரிவித்து விண்ணப்பதாரா்களுக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை, இனி மாதந்தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. வங்கிகளில் 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாவண்ணம் 15ல் வரவு வைக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 30 நாள் என்பது திட்டம் தொடங்கப்பட்டது முதலா என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களுக்கு என்று குறுந்தகவல் வந்ததோ, அந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து செப்டம்பர் 18ஆம் தேதி முதல் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. பலருக்கும் அன்றிலிருந்து ஓரிரு நாள்களில் குறுந்தகவல் கிடைக்கப்பெற்றிருக்கும். எனவே, இன்னும் ஓரிரு நாள்களில் காலக்கெடு முடிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 9.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.