இனிப்பு, காரம் வகைகளை ஆவினில் முன்பதிவு செய்யும் வசதி

மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவினில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனிப்பு, காரம் வகைகளை ஆவினில் முன்பதிவு செய்யும் வசதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவினில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உபபொருட்களின் விற்பனையை 20% அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், தயிர் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலம் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுக்குத் தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று பால்வளத்துறை  அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com