விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் 

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 

News image
Updated On :21 அக்டோபர் 2023, 11:18 am

DIN

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். 

புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எஸ்.சந்திர பிரியங்கா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இதுதொடா்பான கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமி கடந்த சில நாள்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அமைச்சா் பதவியிலிருந்து தானாகவே விலகுவதாக சந்திர பிரியங்கா அறிக்கை வெளியிட்டாா். ஆணாதிக்க மனோநிலை, பாலின பாகுபாடு நிலவுவதால் தன்னால் பதவியில் தொடர முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.

அவரது கருத்தின் அடிப்படையில், ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.