நீட் கையொப்ப இயக்கம்: மாணவர்களுடன் பங்கேற்ற உதயநிதி!

திமுக சார்பில் நீட் விலக்கை ரத்து செய்ய வலியுறுத்தும் கையொப்ப இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 
மருத்துவ மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின்
மருத்துவ மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின்

திமுக சார்பில் நீட் விலக்கை ரத்து செய்ய வலியுறுத்தும் கையொப்ப இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாரணவரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த நீட் விலக்கை வலியுறுத்தும் கையொப்ப இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

50 நாள்கள் நடைபெறும் இந்த கையொப்ப இயக்கத்தின்போது 50 லட்சம் கையொப்பங்கள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் - பெற்றோர்கள் - இன்ன பிற மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதியுடன் திமுக மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்விஎன் சோனு, மருத்துவ அணிச் செயலாளர் எழிலன், மாணவரணி செயலர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com