
தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கூட்டமைப்பின் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பபெறப்பட்டுள்ளது.
தவறு செய்யாமல் இயங்கிய ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த அறிவிப்பை தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு உடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து இணை ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையில், தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்புக்கு சமூக உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பபெறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆவடி ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம்
ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என அறிவித்த இருந்த வேலை நிறுத்தமானது திரும்பபெறப்பட்டு, வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.