பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்சி மாவட்டத்தில் 22.63 லட்சம் வாக்காளர்கள்!

திருச்சி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் உள்ளனர். 

News image
திருச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டார்
Updated On :27 அக்டோபர் 2023, 5:55 am

DIN

திருச்சி:  திருச்சி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் உள்ளனர். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2024 ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வெள்ளிகிழமை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்தப் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சேர்த்து  22,63,169 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டார். 

'இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியில் பங்கேற்கலாம். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்துகொள்ளலாம். 

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போர் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

அக்.27ஆம் தேதி தொடங்கி டிச.9ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.4, 5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்களிலும் பொதுமக்கள் படிவங்களை வழங்கி திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்' என்றார் ஆட்சியர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள்- 10,98,759, பெண்கள்- 11,64,081, மூன்றாம் பாலினம்- 329 என மொத்தம் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.